ஜம்மு காஷ்மீர் || பொட்டு வைத்து வந்த மாணவியை அடித்த ஆசிரியர் நிசார் அகமது பணியிடை நீக்கம்.!
jammu kashmir teacher punish for pottu
ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி பகுதியில் மாணவி ஒருவரை பொட்டு வைத்து வந்ததற்காக பள்ளி ஆசிரியர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பெயரில், அந்த ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின், ரஜெளரி பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் நிசார் அகமது என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து வந்ததற்காக ஆசிரியர் நிசார் அகமது அடித்ததாகக் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டவே, காவல் துறையினர் புகார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவியின் தந்தை தெரிவிக்கையில், "பொட்டுவைத்து வந்ததற்காக தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்கும் சம்பவங்கள் இனி தொடர்ந்தால், வன்முறையில் தான் முடியும்" என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே புகாருக்கு உள்ளான அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
jammu kashmir teacher punish for pottu