கட்டு காட்டாக பணம்! பிஎம்டபிள்யூ கார்! வசமாக சிக்கிய முதலமைச்சர் - அமலாக்கத்துறை அதிரடி!
Jharkhand Chief Minister Hemant Soren ED Raid
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில், ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் முறையற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராகவும்ம், அம்மாநில முதலமைச்சராகவும் உள்ள ஹேமந்த் சோரனிடம் 13 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஹேமந்த் சோரன் பினாமி பெயரில் பிஎம்டபிள்யூ கார் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, தான் பதவியிருந்து விலகுவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் என்ற உத்தரவும் அக்கட்சியின் தலைமை பிறப்பித்துள்ளது.
English Summary
Jharkhand Chief Minister Hemant Soren ED Raid