ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு: கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நேர்ந்த சோகம்!  - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட், பாலமு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பியவர்கள் மீது ஒரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். 

மாநில தலைநகரம் ராஞ்சி அருகே உள்ள செயின்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள பரோன் கிராமத்தில் நேற்று நள்ளிரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஷ்ராவன மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சி ஒன்று கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதில் கலந்து கொண்ட சிலர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் நிலை தடுமாறி இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், ''ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மேதிநிறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

விசாரணையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சௌராஷியா (வயது 34) ரோஹித் சௌராஷியா (வயது 45) மற்றும் மதுமேத்தா (வயது 30) என தெரிய வந்தது. 

இந்த விபத்தை ஏற்படுத்தியவர் காருடன் தப்பி சென்றதால் அவரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand cultural participated 3 peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->