பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஜிம் பயிற்சியாளர் கைது.!
jim coach arrested for harassment case in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே பசல்கஞ்ச் பகுதியில் இயங்கி வரும் ஜிம் ஒன்றுக்கு கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஜிம் பயிற்சியாளரான அர்ஜுன் சிங் என்பவர் நெருங்கி பழகிவுள்ளார்.
ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் அர்ஜுன் சிங் ஜிம்மில் வைத்து மாணவிக்கு போதை மருந்தை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்து அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தனர். ஆனால் பயிற்சியாளர் அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக காவல் ஆணையர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன் படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பயிற்சியாளரை கைது செய்துள்ளனர்.
English Summary
jim coach arrested for harassment case in uttar pradesh