மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : காங்கிரஸ் வாக்குறுதி எப்போது வெளியீடு?...வெளியான முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும்  தீவிரமாக களம் இறங்கினர்.

இதற்கிடையே, ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


இந்த நிலையில் கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று இரவு வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலை முன்னிட்டு மும்பையில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra assembly election when will the congress promise be released important information revealed


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->