வேலை வாய்ப்பு வழங்கும் புதிய திட்டம்: அமேசான் இந்தியா அறிமுகம்!
job opportunities Amazon India launched
இந்தியாவின் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அமேசான் இந்தியா நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கும் 'ஆரோரா' திட்டத்தை தொடங்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்த திட்டத்தை மும்பையில் உள்ள சோல் ஏ.ஆர்.சி என்னும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் கற்றல் திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் பணியாளர்களின் விழிப்புணர்வை அதிகாரிக்கவும் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்கள் ஆதரிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமேசான் இந்தியாவின் இயக்குனர், இந்த 'ஆரோரா திட்டம்' கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்களை உள்ளடக்கிய அனைவருக்கும் சமமான பணியிடங்களை உருவாக்கும் மற்றொரு முயற்சி என தெரிவித்துள்ளார்.
English Summary
job opportunities Amazon India launched