ரெயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in indian railway department
இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 25.
ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை.
தேர்வு செய்யப்படும் முறை : ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி சோதனை, விளையாட்டு சோதனைகள்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், அவர்கள் விரும்பிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொருத்தமான முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இரயில்வே/தலைமையக ஒதுக்கீடு : உதவிப் பணியாளர் அலுவலர்/தலைமையகம், தென் மேற்கு ரயில்வே தலைமையக அலுவலகம், பணியாளர் துறை, ரயில் சவுதா, கடக் சாலை, ஹுப்பள்ளி – 580020
மைசூர் பிரிவு ஒதுக்கீடு : மூத்த பிரிவு பணியாளர் அலுவலர், தென் மேற்கு ரயில்வே, இர்வின் சாலை, மைசூர் – 570001
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 19.
English Summary
job vacancy in indian railway department