ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
July month 15 days holiday reserve Bank of India announced
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது.
விடுமுறை நாட்களின் பட்டியல்
ஜூலை 1 - ரத யாத்திரை - ஒடிசா
ஜூலை 3 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 5 - குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 6 - MHIP நாள் - மிசோரம்
ஜூலை 7 - கர்ச்சி பூஜை - திரிபுரா
ஜூலை 9, 2022 - சனிக்கிழமை
ஜூலை 10 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 11 - ஈத்-உல்-அசா - அனைத்து மாநிலங்களும்
ஜூலை 13 - தியாகிகள் தினம் - ஜம்மு மற்றும் காஷ்மீர், பானு ஜெயந்தி - சிக்கிம்
ஜூலை 14 - பென் டீன் கலாம் - மேகாலயா
ஜூலை 16 - சனிக்கிழமை - ஹரேலா - உத்தரகாண்ட்
ஜூலை 17, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 24, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 26 - கேர் பூஜை - திரிபுரா
ஜூலை 31, 2022 - ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
July month 15 days holiday reserve Bank of India announced