அதிகாலையிலேயே அதிர்ச்சி - இந்திய கபடி வீராங்கனை தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் அருகே கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்தவர் கபடி வீராங்கனை தனலட்சுமி. இவர் தனது பெற்றோருடன் பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் வசித்து வந்தார்.

இவர் நாட்டுக்காக பல போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்கள் வாங்கியதுடன் பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனலட்சுமி தனது தோழிகளுடன் மைசூரு தசரா விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு,தனலட்சுமி ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்த்துவிட்டு மீண்டும் பெங்களூரு திரும்பினார். 

இதையடுத்து அவர் காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியில் வராததால், அவரது தந்தை கதவை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனலட்சுமி தனது அறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கபடி வீராங்கனை தனலட்சுமியின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kabbadi player sucide in karnataga


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->