எல்லாம் காலக்கொடுமை!மாற்றுத்திறனாளி இளைஞர் செய்யவேண்டிய வேலையா இது! எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்! கைது செய்த காவல் துறை! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு இருப்பதனால், கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தது அதிகரித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது!

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பங்கா மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் செயற்கை கால்களுக்குள் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்த முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில் பிகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்தபோது, மகேஷ்குமார் என்ற இளைஞர் ஸ்கூட்டியில் வந்தார். அவரின் செயற்கை கால்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும், அவரது ஸ்கூட்டியில் மறைத்து வைத்திருந்த 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மாற்றுத்திறனாளி இளைஞர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம், பீகாரில் உள்ள பூரண மதுவிலக்கு சட்டத்தை சவாலுக்கு உள்ளாக்கி, கடத்தலர்களின் புதுமையான முறைகளை வெளிப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kandicapte Youth Arrested For Smuggling Legal Bottles Hidden In RDPC Leg


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->