தள்ளிபோன கிராமசபைக் கூட்டம் - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவிருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைத்து, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 என்று மொத்தம் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் மார்ச் 22 மற்றும் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், நவம்பர், 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இதன் காரணமாக கிராம சபை கூட்டத்தை ஒத்திவைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர்.

இதனை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு கிராம சபைக் கூட்டத்தை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grama shaba meeting postpond in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->