கஷ்டப்படுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் - நடிகை சமந்தா! - Seithipunal
Seithipunal


நடிகை  சமந்தா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். முன்னதாக நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து மையோசிடிஸ் உடல்நல பிரச்னையால் சமந்தா பாதிக்கப்பட்டடார். பின்னர்  அதற்கான சிகிச்சை எடுத்ததால் படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடிகை சமந்தா, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகை சமந்தா நடித்துள்ள சிட்டாடல் தொடர் வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைமில்  வெளியாக உள்ள நிலையில், சிட்டாடல் இயக்குனர் ராஜை, நடிகை சமந்தா காதலிப்பதாக இணையத்தில் வதந்தி பரவியது. இதற்கு அமைதியின் அருங்காட்சியகம் என்று எழுதியிருக்கும் ஆடையை சமந்தா அணிந்து நடிகை சமந்தா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதுதான் மனிதர்கள் பலமானவர்களாக மாறுகிறார்கள் என்றும்,  அடிமட்டத்திற்கு சென்றுவிட்ட பிறகுதான் நமது பலம் என்ன என்பது நமக்குத் தெரியும் என்று கூறினார்.

மேலும், அடிமட்ட நிலைக்கு சென்ற பிறகு  பெரிய பிரச்சினை வந்தாலும் அது ஒரு பிரச்சினையாகவே தெரியாது என்றும், அப்படி அடிமட்டத்திற்கு சென்று கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிய அவர், நான் இன்று பலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் எதிர்கொண்ட கடுமையான நிலைமைகள் தான் காரணம் என்று தெரிவித்தார்.

யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னால் அது அவர்களின் நல்லதுக்குதான் என்று நான் அடிக்கடி சொல்வேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sufferers are lucky actress samantha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->