பாலியல் புகார்! வீடியோ எடுத்து மிரட்டல் - பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!
Karanataka BJP MLA MuniRatna Arrested
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சர்ருமான முனி ரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், ராஜராஜேஸ்வரி நகர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், பாஜக முன்னாள் அமைச்சருமான முனி ரத்னா மீது சமூக ஆர்வலர் அளித்த பாலியல் புகாரின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கக்கலிபுரா பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட் ஒன்றில், சமூக ஆர்வலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.
மேலும், எம்எல்ஏ முனிரத்னவுடன் 6 பேர் சேர்ந்து வீடியோ எடுத்து சமூக ஆர்வலரை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை இன்று கைது சித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாதி ரீதியாக திட்டிய வழக்கிலில் முனிரத்னா கைது செய்யப்பட்டு தற்போது தான் ஜாமினில் வெளியே வந்த நிலையில், பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Karanataka BJP MLA MuniRatna Arrested