நிலச்சரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் - முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தனர். தற்போதைய நிலவரப்படி 358 பேர் உயிரிழந்துவிட்டனர். 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரைக்கும் 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:- “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கர்நாடகா ஆதரவாக நிற்கிறது. கர்நாடகாவின் ஆதரவையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகள் கட்டித் தரும் என்பதையும் முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன். 

நாம் ஒன்றாக இணைந்து மீண்டெழுவோம்; நம்பிக்கையை மீட்டெடுப்போம்” என்றுத் தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga cm siddaramaiah build 100 house to affected peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->