கேரள மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகவிலும் மிகப்பெரிய நிலச்சரிவு!
Karnataka Hasam NH Land side
கேரள மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகவிலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், நேற்று கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, நள்ளிரவு நேரத்தில் வயநாடு மாவட்டத்தின் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில்அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கிய 116 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலச்சரிவில் தற்போதுவரை 96 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் மங்களூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஷீரடி காட் சக்லேஷ்பூர் டோடா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவை அடுத்து, இந்த தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக அரசு தடை செய்துள்ளது.
English Summary
Karnataka Hasam NH Land side