காவிரி நீர் விவகாரம்... தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு - கர்நாடக துணை முதல்வர் ஓபன் டாக்.!
Karnataka says Cauvery water issue Full cooperation to Tamil Nadu
தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கு தராமல் கர்நாடகா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது .ஜூலை 12-ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி வீதம் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நிலை விடுவிக்க இயலாது என கர்நாடகா அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் வினாடிக்கு 8000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் தர முடியும் எனவும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார், தமிழகத்தை போல கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது. தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை நாங்கள் நிராகரிக்கவில்லை.
இரு மாநில தேவையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை முக்கியத்துவம் அளிக்கிறது. அணைகளில் நீர்வரத்து மற்றும் கொள்ளளவுக்கு ஏற்ப காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியும்.
கர்நாடக மக்களின் சார்பாக பணிவான கோரிக்கையாக இதனை நாங்கள் முன் வைக்கிறோம். கர்நாடக சார்பில் தமிழகத்திற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Karnataka says Cauvery water issue Full cooperation to Tamil Nadu