ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்.. கல்லூரி மாணவி அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவியின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த பெண்ணின் ஹால் டிக்கெட் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேர்வு குழுவினர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் தனது கணவரின் ஆண் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக சன்னிலியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இருப்பினும் தேர்வு ஆணையம் புகைப்படத்தை சரியாக கவனிக்காமல் ஹால் டிக்கெட் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய தேர்வு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka teacher exam hall ticket sunny leone photo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->