திகார் சிறையில் இருந்த கவிதா மருத்துவமனையில் திடீர் அனுமதி.!
kavitha admitted hospital in delhi
டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும், சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த இருவழக்குகளில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். சிபிஐயும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி திகார் சிறையில் வைத்து கவிதாவை கைது செய்தது.
இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக டில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
English Summary
kavitha admitted hospital in delhi