45 லட்சத்திற்கு ஏழாம் போன 0007 எண்! இது முதல்முறை!
kerala car fancy number sale 45l
வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களை வழங்க திருவனந்தபுரம் போக்குவரத்து துறை ஆன்லைன் ஏல முறையைநடத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில், "KL 07 DG 0007" என்ற பிரத்தியேக பதிவு எண் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இது கேரளத்தில் வாகன பதிவு எண்களுக்கு கிடைத்திருக்கும் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவிலான ஏல தொகையாக பதிவாகியுள்ளது.
அதேபோல், "KL 07 DG 0001" என்ற இன்னொரு பேன்சி எண் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் போனது. வாடிக்கையாளர்களின் விருப்பம், அந்த எண்களின் சிறப்புமிக்க தன்மை ஆகியவை இந்த நம்பர் பிளேட்களின் மதிப்பை உயர்த்துகின்றன.
இந்தத் தருணங்கள், தனிப்பட்ட அடையாளம் மற்றும் அதிர்ஷ்டத்துக்கான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
English Summary
kerala car fancy number sale 45l