இயற்கை விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஊட்டிய நெல் ஜெயராமன்பிறந்ததினம்!
Nel Jayaraman Birthday Educating Younger Generation on Organic Farming
இயற்கை விவசாயம் குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஊட்டிய திரு.நெல் ஜெயராமன் அவர்கள் பிறந்ததினம்!.
இரா. ஜெயராமன் ( நெல் ஜெயராமன்; ஏப்ரல் 15, 1968 - டிசம்பர் 6, 2018 ) ஒரு விவசாயி, பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர். நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் ஒர் இணைச் செயற்பாட்டாளர் ஆவார்.
ஜெயராமன் இந்தியாவில், தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி 1968-ஆம் ஆண்டு பிறந்தவர். 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் அச்சுக்கூடத்தை நடத்தி வந்தார். தந்தையின் விவசாயத்தை இடையே செய்தார்.

நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003 இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் 2018, டிசம்பர் 6 ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
English Summary
Nel Jayaraman Birthday Educating Younger Generation on Organic Farming