நீட் விவகாரம்: மாணவர்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி.!!
minister ragupathy speech about neet issue
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-
"ஒத்த கருத்துடைய பல்வேறு மாநிலங்கள் நம்முடன் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் நம் மீது நம்பிக்கையில் உள்ளனர். தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் கிடையாது.

மத்திய - மாநில அரசுக்கு இடையிலான உறவை மேம்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்தக் குழு ஜனவரி மாத இறுதிக்குள் முழு வரைவு அறிக்கையை மாநில அரசுக்கு வழங்கும்.
இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் உள்ளிட்டோர் இடம்பெறுவர். நீட் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister ragupathy speech about neet issue