ஆட்டுப்பட்டியில் புதிய ஆரோ வாட்டர் மையம்..எம்.எல்.ஏ அனிபால் கென்னடியின் முயற்சி வெற்றி!   - Seithipunal
Seithipunal


உப்பளம் தொகுதி DR.அம்பேத்கர் நகர் ஆட்டுப்பட்டியில் புதிய ஆரோ வாட்டர் மையம் அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான நடவடிக்கையில் எம்.எல்.ஏ அனிபால் கென்னடி ஈடுபட்டுவருகிறார்.

உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் நகர் ஆட்டுப்பட்டியில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய ஆரோ வாட்டர் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு திமுக உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் முயற்சியால் கிடைத்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், அம்பேத்கர் நகர் ஆட்டுப்பட்டி, ரோடியார்பேட், அங்குநாயக்கர் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆரோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த அமைப்பை நிறுவுவதற்காக, தற்போது ஆட்டுப்பட்டியில் பழுதடைந்து பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள பள்ளிக்கல்வி துறையின் மையத்தில் சுமார் 700 சதுர அடியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய பள்ளி கட்டிடத்தில் முற்புதர்கள், விஷபூச்சிகள் மற்றும் கொசுக்கள் அதிகமாக இருப்பதாலும், அந்த இடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி கட்டிடத்தை இடித்து அந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரோ வாட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை இயக்குநர் பிரியதர்சினி அவர்களிடம் திமுக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அவர்கள் இன்று மனுவாக கோரிக்கை முன்வைத்தார். உடன் திமுக தொகுதி அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர் லக்ஷ்மணன், தொகுதி துணை செயலாளர் நிசார், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், திமுக கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ் மற்றும் கழக சகோதரர் செந்தில் குமார் ஆகியோர் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Auro Water Centre in Aatupatti MLA Anibal Kennedy's bid succeeds


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->