மனைவியின் ஒரு கோடி ரூபாயை திருடி கள்ளகாதலிக்கு கொடுத்த கணவன் கைது.!
kerala Forgery Husband arrested
கேரள மாநிலம், கோடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 52). இவர் போதகராக இருந்து வருகிறார். இவரின் மனைவி அமெரிக்காவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
ஜோஸின் மனைவி மாதந்தோறும் தனது கணவருக்கு வங்கி கணக்கில் பணம் போட்டு விடுவது வழக்கம். சமீபத்தில் ஜோஸின் மனைவி தனது வங்கிக் கணக்கினை பரிசோதித்து பார்க்கும் போது ஒரு கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது.
அதிர்ச்சியடைந்த ஜோசின் மனைவி தனது கணவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து அவர் ஆலப்புழா மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ஜோஸ் பாசுரபவனம் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றி இருப்பது தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில், ஜோஸ் பிரியங்காவுடன் பழகத் தொடங்கி, அது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதும். இதனையடுத்து இருவரும் நேபாள் நாட்டில் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவருக்கு காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதன் மூலம் குற்றவாளிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி வந்துள்ளதாக தகவல் வந்தது.
ஆலப்புழா காவல்துறை சூப்பிரண்டு ஜெயதேவ் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
kerala Forgery Husband arrested