கேரள தங்க கடத்தல் : அமலாக்கத்துறை வெளியிட்ட பெரும் அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்த பார்சலில் அதிக தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் மற்றும் சுங்கத் துறையினர், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர், அமலாக்கத் துறையினர் மற்றும் சுங்கத் துறையினர்  தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமலாக்கத் துறையினர் , "கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கும் கேரள அரசு உயரதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

இந்த வழக்கு குறித்து கேரளாவில் நியாயமான விசாரணை நடைபெறுவது சாத்தியமில்லை. எனவே, இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Gold Smuggling Enforcement Department


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->