வேலை நிறுத்த நாளில் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு! - Seithipunal
Seithipunal


போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாளில் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கீட்டு அரசு அந்த தொகையை போக்குவரத்து ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அன்றைய தினம் 3 பணிமனைகளில் 49 ஓட்டுநர்கள் மற்றும் 69 நடத்துனர்கள் பணிக்கு வரவில்லை.

இதனால் அந்த 3 பணிமனைக்கும் ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கீட்ட மாநில போக்குவரத்துக் கழகம், அந்த தொகையை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு போக்குவரத்துக் கழக ஊழியரிடம் இருந்தும் 5 சம தவணைகளில் பணத்தை பிடித்தம் செய்ய முடிவு செய்ததுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் 5 தவணைகளாக ரூ.40,277 வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala govt bus strike issue G O


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->