கேரளாவில் மீண்டும் தீவிரமடைந்த பருவமழை: 9 மாவட்டங்களுக்கு ''ஆரஞ்சு - மஞ்சள் எச்சரிக்கை''!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, நாதாபுரம் போன்ற மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதில் சிக்கி நின்ற காரின் மீது மற்றொரு மரம் விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கி செய்தமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி மரங்களை அப்புறப்படுத்தி காரில் இருந்தவர்களை மீட்டனர். 

இருப்பினும் காரில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக வயநாடு மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala heavy rain Orange yellow alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->