நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு - அதிரவைத்த கேரளா நடிகை.!
kerala heroine harassment case against actors
கேரளாவில் பல நடிகைகள் தற்போது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொல்லத்தில் உள்ள முகேஷ் இல்லத்தை நோக்கி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் படி பேரணி நடத்தப்பட்டது.
இது குறித்து கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, நடிகர் மணியன்பிள்ளை ராஜு விரிவான விசாரணை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
'சிலர் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில், நிரபராதி மற்றும் குற்றவாளிகள் என இருவருமே இருப்பார்கள். எனவே, விரிவான விசாரணை அவசியம்' என்றுள்ளார்.
சமீபத்தில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் தெரிவித்திருந்ததனையடுத்து அவர் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
kerala heroine harassment case against actors