பரோட்டா கடனாக தராததால் வாலிபர் ஆவேச செயல்! அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்! - Seithipunal
Seithipunal


கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் கொல்லம் எழுகோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். 

அங்கு சென்று அவர் 10 பரோட்டா பார்சல் கேட்டுள்ளார். அதனை ஓட்டல் ஊழியர்கள் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை கேட்டனர். 

ஆனால் ஆனந்த் பணம் தர மறுத்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடும் பிரச்சனை தோன்றியது. 

மேலும் ஆனந்த் ஓட்டலில் சமைக்க வைத்திருந்த உணவு பொருட்களில் சாலையில் கிடந்த சேற்றை எடுத்து வந்து ஊற்றினார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆனந்தை ஹோட்டலை விட்டு வெளியே துரத்தி விட்டனர். 

இருப்பினும் ஓட்டல் உரிமையாளரை ஆனந்த் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். ஓட்டல் உரிமையாளர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala hotel food non payment youth arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->