கேரளா || லாட்டரி சீட்டு மூலம் ஏழைகள் கொள்ளை : உண்மையை போட்டு உடைத்த கவர்னர்.!
kerala lottary seet cheeting people governor arif speech
சமீப நாட்களாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில அரசை லாட்டரி மற்றும் மது விற்பனை உள்ளிட்ட விவகாரத்தில் வெளிப்படையாகவே அவர் பேசியுள்ளார். கொச்சியில் நூல் வெளியீடு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், போதைப்பொருளுக்கான தலைநகர் விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தை கேரளா மாநிலம் முந்தி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 'நமது வளர்ச்சிக்கு மதுவும், லாட்டரியும் போதும் என்று நாம் முடிவு செய்திருக்கிறோம். 100 சதவீதம் கல்வியறிவு உடைய ஒரு மாநிலத்துக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்?.
ஒரு மாநிலத்தின் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக லாட்டரியும், மதுவும் இருப்பதை நினைத்து, மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன். சரி.. லாட்டரி என்றால் என்ன? இங்கு இருக்கும் யாராவது லாட்டரி சீட்டு வாங்கியது உண்டா? வெறும் ஏழைகள் மட்டும் தான் லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். அவர்களை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமைப்படுத்துகிறீர்கள்' என்று கேரளா கவர்னர் ஆரிப் முகமது பேசியுள்ளார்.
English Summary
kerala lottary seet cheeting people governor arif speech