அதிர்ச்சி.. கஞ்சா கும்பலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. மகன் கைது..!
kerala mla son arrested for drug case
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டம் குட்டநாட்டில் உள்ள தகழி பாலத்துக்கு அடியில் ஒரு கும்பல் புகை பிடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கும்பலிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த கும்பலில் ஒருவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார், அந்த கும்பலில் இருந்த 9 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் காயம்குளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் எம்.எல்.ஏ. பிரதிபாவின் மகனும் இருந்துள்ளார்.
இதையடுத்து, ஒன்பது பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், எம்.எல்.ஏ பிரதிபா தனது மகன் கைது செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அதிகாரிகள் கேள்வி மட்டுமே கேட்டதாக கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
English Summary
kerala mla son arrested for drug case