96 திரைப்படத்தின் "ரியல்" கிளைமேக்ஸ் டிவிஸ்ட்! பள்ளி ரீயூனியனில் சந்தித்து தலைமறைவான காதல் ஜோடி!
Kerala real 96 movie climax change incident
கேரளாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பள்ளி நண்பர்களின் ரீயூனியன் நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள், ஜோடியாக தலைமறைவாகிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்திற்கு பிறகு, பள்ளி தோழர்களின் ரீயூனியன் நிகழ்ச்சி அதிகமாகி உள்ளது.
இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ்-ல் காதலர்களான திரிஷாவும், விஜய் சேதுபதியும் இறுதியில் ஒன்று சேராமல், அவரவர் வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.
ஆனால், கேரளாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பள்ளித் தோழர்களின் ரியூனியன் நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள், ஜோடியாக தலைமறைவாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படித்த மாணவர்கள், 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரியூனியன் நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர்.
இதில் பள்ளி பருவத்தில் காதலித்த எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும், இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர்.
இருவரும் தங்களது பழைய நினைவுகளையும், காதலித்த போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் கலந்து பேசியதாக சொல்லப்படுகிறது.
பிறகு 96 திரைப்படத்தில் வருவது போல இருவரும் ரியூனியன் நிகழ்ச்சியில் இருந்து நைசாக கிளம்பி தலைமுறைமாவாகியுள்ளனர்.
இதற்கிடையே ரியூனியன் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால், இருவரின் உறவினர்கள் வலை வீசி தேடியும் கிடைக்காததால், இது குறித்து இரு வீட்டாரும் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
English Summary
Kerala real 96 movie climax change incident