இனி நோ ஸ்கூல் பேக்! மாணவர்களே ரெடியா? பரிசீலனையில் அரசு!
Kerala School Bag free day
கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் மற்றும் உடல் நலம் கருதி, அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் விதமாக, ஒரு மாதத்தின் நான்கு நாட்களுக்கு புத்தகப்பை இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் திட்டத்தை கொண்டு வர, கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்களின் உடல் எடையில் மூன்றில் இரண்டு மடங்கு புத்தகப்பை சுமை இருப்பதாக, சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் மனம் குமுறி வரும் இந்த காலகட்டத்தில், கேரள மாநில அரசின் இந்த புதிய திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாதத்தில் நான்கு நாட்கள் என்பதற்கு பதிலாக இன்னும் கூடுதலான நாட்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து கேரள மாநில பொது கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை சுமை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கேரளா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்த விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அதிகபட்ச புகார்கள் மற்றும் சில ஆலோசனைகளும் அரசுக்கு குவிந்து வருகிறது.
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், பாடப் புத்தகத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இருப்பினும் மாணவர்களின் புத்தகப் பைகள் அதிக எடையுடன் இருப்பதாகவே பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வருகிறது.
தற்போது கேரளா மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் புத்தக பையின் எடை 1600 கிலோ கிராம் முதல் 2200 கிலோ கிராம் வரையிலும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை ரெண்டரை கிலோ முதல் 4.30 கிலோ வரை பராமரிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது நான்கு நாட்கள் அரசு பள்ளிகளில் புத்தகப்பை இல்லாத நாட்கள் திட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கான பரிசீலினை மற்றும் ஆலோசனை நடந்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Kerala School Bag free day