கேரளாவில் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - சிசிடிவி இல்லாத இடம் தான் டார்கெட் - அரங்கேறிய கொடூரம்!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் பாலியல் துன்பத்திற்கு ஆளான விவகாரத்தில், சிறுமிகள் சிலரும் இதில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில் அடிப்படியில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலத்தின் கிரிக்கெட் பயிற்சியாளர் எம் மனு தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ஆறு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். 

ஏற்கனவே ஏப்ரல் மாதம் பணியில் இருந்து விலகிய மனுவை, கடந்த மே மாதம் மீண்டும் பயிற்சியாளராக கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனை இந்த தொடரில் பங்கேற்க வந்தபோது, இவர் தான் பயிற்சியாளராக செயல்படுகிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து பயிற்சியாளர் மனு அவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட ஆறு வீராங்கனைகள் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் மனு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. 

மேலும் வீராங்கனைகளை மிரட்டி சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் பயிற்சியாளர் மனு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கேரளா கிரிக்கெட் சங்கம் தரப்பில், இந்த விவகாரம் போலீஸ் விசாரணைக்கு வந்த போதுதான் எங்களுக்கே தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே பதியப்பட்டிருந்த வழக்கிலிருந்து கேரள உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தோம். 

மேலும் பெற்றோர்களும் அவரை பயிற்சியாளராக நியமிக்குமாறு கோரிக்க வைத்தனர். கேரளா கிரிக்கெட் சங்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு சிலர் இப்படி செய்து வருகின்றனர். நாங்கள் பயிற்சியாளர் மனுவை எந்த வகையிலும் பாதுகாக்க விரும்பவில்லை. போலீசாரின் விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். தற்போது பெண் பயிற்சியாளர் ஒருவரை கேரள கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சியாளராக நியமித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Women Cricketers Abused male coach Manu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->