சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! - 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவின், திரிபுரா மாநிலம் தர்மநகர் மாவட்டத்தில் உள்ள உப்டஹல்லி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி  ஒருவர் நேற்று மாலை நேரத்தில் தனது கிராமத்தில் உள்ள சாலையில் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர்அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். மேலும், சிறுமியின் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுபகுதிக்கு சிறுமியை கடத்தி கொண்டு சென்று இரண்டு பேரும்   சிறுமியை அங்கு வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இரண்டு பேரும் அந்த இடத்தில் இருந்து  தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்த, அந்த நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்துள்ளார்.  சிறுமியை பார்த்த கிராம மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். இதனை தொடர்ந்து, அச்சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார்,  இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பித்து ஓடிய  இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kidnapping and gang rape of the girl 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->