பாஜக அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்.!! குகி மக்கள் கூட்டணி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மார்ச் 2022ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், குக்கி மக்கள் கூட்டணி 2 தொகுதிகளிலும் மற்றும் சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் குக்கி மக்கள் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. பாஜகவை சேர்ந்த பீரேன் சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தால் குக்கி இன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குக்கி இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது குக்கி மக்கள் கூட்டணி பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இருந்தாலும் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் பெரும்பான்மை இழக்க கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kukki People alliance withdrawal BJP Govt support


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->