L and T பெண் ஊழியர்கள் குஷி!!! மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை!!!
L and T female employees are happy One day off for menstruation in a month
நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான L and T, இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தில் 5000 பெண்கள் உட்பட மொத்தம் 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக L and T நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

L and T நிறுவனம்:
அண்மையில் 'உலகின் முன்னணி நாடாக நாம் வளர வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைச் செய்ய வேண்டும்' என்று சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் இருக்கும் பெண்களுக்குப் பொருந்தும் என்றும், விரைவில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
L and T female employees are happy One day off for menstruation in a month