மும்பை விமான நிலையத்தில் தரையில் உருண்டு நடனமாடிய இளம்பெண்ணால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், நடை மேடைகளிலும் இளம்பெண்களும், இளைஞர்களும் திடீரென நடனமாடுவது மற்றும் சாகசங்கள் செய்வது என்று பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்வது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

மக்கள் கூடும் பொது இடங்களில் இப்படி அத்துமீறும் வகையிலான செயல்களை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதையும் மீறி தற்போது மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் உருண்டு நடனம் ஆடியுள்ளார்.

தனது சல்வார் துப்பட்டாவை தூக்கி வீசியபடி அந்த பெண் குருஷேத்ரா படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆப் க ஆனா' என்ற பாடலுக்கு நடனமாடினார். விமான நிலைய தரையில் படுத்து உருண்டு பிரண்டு அவர் நடனமாடியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒருவர்,  'இந்த கிருமி தற்போது விமான நிலையங்களுக்கும் வந்து விட்டது' என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவின் கீழ் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற அத்துமீறும்படியான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lady Laying and Dancing on the Floor in Mumbai Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->