கோயில் நில அபகரிப்பு வழக்கு || தலைமறைவாக இருந்த நில அளவைத்துறை இயக்குநர் கைது! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. 

இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக எம்எல்ஏ ஜான் குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில்  காமாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷ் கைது செய்யபட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பதுங்கி இருந்த நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என எச்சரித்தந்த நிலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land surveying director arrested in temple land grabbing case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->