உ.பி : சாம்பல் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதி கவிழ்ந்து விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் படோகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரேபரேலி - பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்ற கரி சாம்பல் ஏற்றிய லாரி ஒன்று காரை முந்தி செல்ல முயன்றது.

இதில், திடீரென கார் மீது லாரி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டன.

அவர்கள் ஹோட்டல்  ஒன்றிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காரில், வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry and car accident in uttarpradesh 5 death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->