பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த பெண் - டெல்லியில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு நேற்று தம்பதியினர் போன்று இருவர் வந்துள்ளனர். அங்கு நான்கு மணி நேரத்திற்கு ஓட்டலை புக் செய்த அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை.

இது தொடர்பாக, ஓட்டல் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார் விரைந்து வந்து, ஓட்டல் அறையின் கதவைத் திறந்து பார்த்த போது இருவரும் அறையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து, போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அந்த அறையில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், இருவரும் காதலிப்பதாகவும், வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத தாங்கள், மரணத்தில் ஒன்று சேர்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆயிஷா என்றும், ஆணின் பெயர் சோராப் என்பதும் தெரிய வந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

இதில், ஆயிஷாவுக்கு முகமது குல்பாம் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த மரணம் தொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் இரண்டு குழந்தைகளின் தாய், தனது காதலுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers sucide hotel in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->