வீட்டு சமையலறையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! அதிர்ச்சி சம்பவம்!!! - Seithipunal
Seithipunal


பொதுவாக நாம் வீடுகளிலும், கடைகளிலும் சமையலுக்கு பயன்படுத்தும் LPG கேஸ் சிலிண்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறுவதுண்டு. இதன் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுப்பது முதல் விபத்து ஏற்படாதவண்ணம் எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். 

எப்போது என்ன நடக்கும் என்ற தெரியாத நிலையில், நாம் மிகவும் கவனமாகவே இந்த LPG கேஸ் சிலிண்டர்களை கையாள வேண்டும். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஒரு வீட்டில் திடீரென LPG சிலிண்டர் வெடித்துள்ள சம்பவம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.  

அதில் ஒரு பெண்மணி, வீட்டின் சமையலறையில் நின்று பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வண்ணம் அந்த பெண்மணியின் அருகில் இருந்த LPG கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. சிலிண்டர் வெடித்த போது ஏற்பட்ட அதிர்வில் அந்த பெண் கீழே விழுந்துள்ளார்.

மேலும் அந்த சமையலறை முழுவதும் வெடித்து சிதறியுள்ளது. ஆனால் அதிஷ்டவசமாக அந்த பெண்  சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து அந்த பெண்மணி கூறும்போது, "வீட்டில் இருந்த அந்த கேஸ் சிலிண்டரில் மிகவும் சிறிதளவே கேஸ் இருந்துள்ளது. அதனால் தான் பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும், சேதமும் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார். 

வீட்டின் சமையலறையில் இப்படி திடீரென LPG கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LPG Gas Cylinder Burst Out In a House Kitchen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->