மத்திய பிரதேசம் - முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்.!
madhya pradesh kill threat to former minister
மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சரான ஜெய்பான் சிங் பாவையா மகள் சமீதா சிங். இவர் அங்குள்ள குவாலியர் மாவட்டத்தில் மாதவ் மகாவித்யாலயா கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மகள் சமீதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் அமைச்சர் இரண்டு மாதங்களில் கொலை செய்யப்படுவார். அவர் மகள் மீது ஆசிட் வீசப்படும் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சமீதா கடிதம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று மாத விசாரணைக்கு பின்னர், இந்த கடிதம் தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளி கிழமை எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அந்த எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ஜெயிப்பான் சிங் மகள் சமீதா பணிபுரியும் மையத்தில் வேலை செய்யும் மற்றொரு பணியாளருக்கு எதிரான போக்கை கைவிடும்படி எழுதபட்டுள்ளது.
அப்படி இல்லையென்றால், கடிதத்தில் எழுதியுள்ளது போல் நடக்கும் என்று மிரட்டல் விடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கடிதம் எழுதிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
madhya pradesh kill threat to former minister