போலீஸ் மீது டிராக்டர் ஏற்றிக்கொலை: ஓட்டுனரிடம் தீவிர விசாரணை! மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், பியோஹரி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேந்திரா பக்ரி மற்றும் தன்னுடன் பணியாற்றும் சக போலீசார் உடன் குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக நள்ளிரவு படோலி கிராமம் வழியாக தங்களது வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது அவர்கள் எதிரில் வந்த மணல் டிராக்டர் ஒன்று வேகமாக வருவதை கண்டதும் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் போலீசாரை கண்டதும் டிராக்டர் ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியுள்ளார். அதை தடுக்க முயன்ற மகேந்திர பக்ரி மீது ஓட்டுனர் டிராக்டரை ஏற்றி சென்றுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து டிராக்டர் ஓட்டுனர் மற்றும் அவருடன் பயணித்த மற்றொருவரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் டிராக்டரின் உரிமையாளர் தப்பி சென்றதாகவும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Tractor attacked police died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->