தலித் மாணவியை பள்ளிக்கு அனுப்பியதற்காக மொத்த குடும்பத்தையும் தாக்கிய கிராமத்தினர்.!
madhya pradesh villagers attacked entire family for sending a Dalit student to school
தலித் மாணவியை பள்ளிக்கு அனுப்பியதற்காக, அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரை, ஒரு பிரிவினர் கடுமையாக தாக்கிய கனலோ கட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் அடுத்த ஷாஜாபூரைச் சேர்ந்த கிராமத்தில், பெண்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்ற விதி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மீறி பள்ளிக்கு மகளை அனுப்பி பெற்றோர் மீது, ஒரு பிரிவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்த காணொளியும், பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, "என்னை அந்த பிரிவினர் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்" என்று கூறும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த மாணவி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பெட்டியில்,
"நான் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, என் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் என்னை தடுத்து நிறுத்தி, 'உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் பள்ளிக்கு சென்று வருவாய்' என்று மிரட்டினர்.
அவர்கள் தாக்கியதில் என் பெற்றோர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காயமடைந்தது உள்ளனர்" என்று அந்த மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில், "இரு பிரிவினருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
madhya pradesh villagers attacked entire family for sending a Dalit student to school