விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஜாமின் மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்!
Madras High Court denied bail to LTTE members
வங்கி கணக்கில் இருந்து 40 கோடி ரூபாயை மோசடி செய்து எடுக்க முயன்ற விடுதலைபுலிகள் அமைப்பினர்!
மும்பை கோட்டை கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அமிதா ஏ லால்ஜி என்பவர் 40 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால் அந்த வங்கி கணக்கு கையாலப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்த் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக அந்த பணத்தை கையாடல் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக இலங்கைத் தமிழரான லட்சுமணன், மேரி பிரான்சிஸ்கோ என்பவர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளார். பான் கார்டு,ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளார். அவருடன் கென்னிஸ்டன் பெர்னான்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து அமிதாவின் பொது அதிகார பெற்ற போலி ஆவணங்களை தயாரித்து உள்ளனர்.
இந்த ஆவணங்களை வைத்து அவரின் வங்கி கணக்கில் இருந்த 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் போலி பாஸ்போர்ட் வழக்கில் லட்சுமணன், மேரி, பிரான்சிஸ்கோ உள்ளிட்ட ஆறு பேர் சிக்கினார். இதனால் அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாள் செய்யப்பட்டதால் அரசு தரப்பு அறிக்கையை ஏற்று மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்னிலையில் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சட்டபூர்வ ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவையும் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அமைப்பினர் கடந்த மார்ச் 29 குற்றத்தை தாக்கல் செய்துள்ளனர். ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
English Summary
Madras High Court denied bail to LTTE members