பா.ஜ.க பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.! எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடைபெற உள்ள நிலையில் மும்பையில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். 

பிரதமர் மோடி உடன் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரும் கலந்து கொள்ள உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் மகராஷ்டிரத்தில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதமரை வரவிருக்கும் விதமாக பா.ஜ.கவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra BJP general meeting PM Modi arrival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->