சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்ய அரசு அனுமதி.!
Maharashtra govt permit to sale wine in super market
இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பழச்சாறுகளின் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒருபக்கம் மதுவை ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maharashtra govt permit to sale wine in super market