மேற்கு வங்காளத்திற்கு எதிராக சதி நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Mamata Banerjee Alleges Conspiracy Against West Bengal
மேற்கு வங்காள மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள அரசுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது, ஊழல் வழக்கில், கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு, அவற்றை திருத்த வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மேற்கு வங்காள அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் தவறு செய்திருந்தால், அந்த தவறுகளை திருத்திக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டம் தன் கடமையை செய்யும். ஆனால் ஊடகங்கள் விசாரிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee Alleges Conspiracy Against West Bengal