குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட பாலியல் வழக்கில் விடுதலையான நபர்..!
Man acquitted in sex case killed family and then committed suicide
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டம் பமுனிமைதான் பகுதியை சேர்ந்தவர் ஜுலி டிகா என்ற 42 பெண்ணுக்கு, 15 வயது நிரம்பிய மகள் உள்ளார்.
இவர் தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்து லோகித் தகுரியா என்ற 47 வயதுடைய நபரை 02வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜுலி டிகா தனது 02வது கணவர் லோகித் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜுலியின் இரண்டாவது கணவர் லோகித், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து ஜுலி டிகா லோகித் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லோகிதத்தை போலீசார் கைது செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/man kil-hmhlq.jpg)
சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் லோகித் விடுதலையாகியுள்ளார். இதன் பின்னர்லோகித்திற்கும், ஜுலிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 02 மணியளவில் ஜுலிக்கும், லோகித்திற்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லோகித் மரக்கட்டையால் ஜுலியை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜுலி டிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/man k-rsl73.jpg)
அத்துடன், ஆத்திரம் அடங்காத லோகித் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜுலியின் கழுத்தையறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த வின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து 03 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man acquitted in sex case killed family and then committed suicide