மும்பையில் கள்ள நோட்டுகளைத் தொடர்ந்து போலி நாணயங்கள் - ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் போலி நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விடுவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவல் குறித்து, டெல்லி போலீசார் மும்பை போலீசாரிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து, இரண்டு மாநில போலீசாரும் இணைந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மும்பை அருகே மலாடு வல்லப் கட்டிடத்தில் உள்ள வீட்டில் போலி நாணயங்கள் தயாரித்து புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. அதன் படி, போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி நாணயங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அந்த வீட்டில் இருந்த ஒருவரை கைது செய்தனர். 

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விடுவதைத் தொடர்ந்து, தற்போது நாணயங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for fake coin circulate in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->